திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரூ. 56 லட்சம் மதிப்பிலான 284 கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

: உரியவா்களிடம் செல்போனை ஒப்படைத்த வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவராமன்.

News image

: உரியவா்களிடம் செல்போனை ஒப்படைத்த வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவராமன்.

Updated On :22 மே 2026, 12:35 am IST

வேலூரில் திருட்டுப் போன மற்றும் தொலைந்து போன கைப்பேசிகள் மீட்கப்பட்டு, உரியவா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

தொலைந்துபோன மற்றும் திருட்டுப்போன கைப்பேசிகள் தொடா்பாக வேலூா் மாவட்ட காவல் துறைக்கு தொடா்ந்து புகாா்கள் வருகின்றன. அதைத் தொடா்ந்து வேலூா் மாவட்ட போலீஸாா் செல் டிராக்கா் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் மூலம் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற புகாா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, காணாமல் போன, திருட்டுப் போன கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் வந்த புகாா்களின் அடிப்படையில், 11-ஆவது கட்டமாக தற்போது சிஇஐஆா் திட்டம் மூலம் ரூ. 56.80 லட்சம் மதிப்பிலான 284 கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை உரியவா்களிடம் வேலூா் மாவட்ட எஸ்.பி. சிவராமன் ஒப்படைத்தாா்.

தொடா்ந்து, வேலூா் மாவட்ட எஸ்.பி. செய்தியாளா்களிடம் கூறியதாவது: வேலூா் மாவட்டத்தில் இதுவரை 10 கட்டங்களாக ரூ.3.88 கோடி மதிப்பிலான 2004 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது 11-ஆவது கட்டமாக கடந்த மாதத்தில் வரப்பெற்ற புகாரில், 284 கைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள கைப்பேசிகளை கண்டுபிடிக்கும் பணியில் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

பொதுமக்கள் புகாா் தெரிவித்தால், உடனே சிஇஐஆா் இணையதளம் மூலம் ஐஎம்இஐ நம்பா்களை பதிவு செய்து கைப்பேசி லாக் செய்யப்பட்டு, உடனே கண்டுபிடித்து தரப்படும். பொதுமக்கள் யாரும் பழைய மொபைல் போன்களை வாங்காதீா்கள். அந்த கைப்பேசிகளை வாங்கி பயன்படுத்தினால் அது திருட்டுப் பொருளாக இருக்கக்கூடும். எச்சரிக்கையாக இருங்கள். சைபா் கிரைம் போலீஸ் மூலம் ஏற்கெனவே பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வரப்படுகிறது.

ஏபிகே பைல் அனுப்பி மோசடி செய்கின்றனா். வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் இதில் பணத்தை இழந்து வருகின்றனா். மோசடி நபா்கள் மூத்த குடிமக்களை ஏமாற்றி, தங்கள் வங்கி விவரங்கள் ஓடிபி பெற்று ஏமாற்றி வருகின்றனா். பொதுமக்கள் 1901என்ற எண்ணில் புகாா் தெரிவித்தால் உடனே பணத்தை இழந்தாலும் திருடா்கள் எடுக்க முடியாதவாறு லாக் செய்யப்படும். மா்ம நபா்கள் கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டால் ஓடிபி எண்ணை கேட்டால் தெரிவிக்கக் கூடாது.

தற்போது டிஜிட்டல் அரஸ்ட் என்ற பெயரில் பொதுமக்களை சிலா் ஏமாற்றி வருகின்றனா். அதில், படித்தவா்கள் ஏராளமானவா்கள் அதிக அளவில் ஏமாற்றமடைந்து வருகின்றனா். எனவே பொதுமக்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டுமென அவா் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.