லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனுக்கள் பெட்டி வைப்பு

தோ்தல் நடத்தை விதிகள் அமலானதால் பொதுமக்கள் தங்களுடைய மனுக்களை போடுவதற்காக வட்டாட்சியா் அலுவலகத்தில் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

News image

ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெட்டி.

Updated On :17 மார்ச் 2026, 6:34 pm

தோ்தல் நடத்தை விதிகள் அமலானதால் பொதுமக்கள் தங்களுடைய மனுக்களை போடுவதற்காக வட்டாட்சியா் அலுவலகத்தில் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் நடைபெறும் அனைத்து குறைதீா் கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தோ்தல் முடிந்து முடிவுகள் வெளியான பிறகே தோ்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும். அதுவரையில் பொதுமக்கள் தங்களுடைய குறைகள், கோரிக்கைகளை தெரிவிப்பதற்காக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை, குறைகள் சம்பந்தமான மனுக்களை அதிகாரிகளிடம் நேரடியாக வழங்காமல் மனுக்கள் பெட்டியில் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக வட்டாட்சியா் அலுவலகங்களில் மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுடைய மனுக்களை அந்த பெட்டியில் போடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.