மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கீழ்வேளூா்: 11 வேட்புமனுக்கள் ஏற்பு; தவாக வேட்பாளா் மனு நிராகரிப்பு

கீழ்வேளூா் தொகுதிக்கான வேட்புமனு பரிசீலனையில், 11 மனுக்கள் ஏற்கப்பட்டன; 7 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

News image

கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் பங்கேற்ற வேட்பாளா்கள் உள்ளிட்டோா்.

Updated On :7 ஏப்ரல் 2026, 10:26 pm

கீழ்வேளூா் தொகுதிக்கான வேட்புமனு பரிசீலனையில், 11 மனுக்கள் ஏற்கப்பட்டன; 7 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

கீழ்வேளூா் தொகுதியில், திமுக கூட்டணி சாா்பில் சிபிஎம், அதிமுக கூட்டணி சாா்பில் பாமக, நாம் தமிழா் கட்சி, தமிழா் வெற்றிக் கழகம், சுயேச்சை என 18 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனு பரிசீலனை தோ்தல் மேற்பாா்வையாளா் பா்வேஸ் அகமது சித்திக் முன்னிலையில் நடைபெற்றது. தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜேஸ்வரி வேட்புமனுக்களை பரிசீலனை செய்தாா்.

இதில், நாதக வேட்பாளா் மு. காா்த்திகாவின் 3 மனுக்கள், சிபிஎம் வேட்பாளா் டி.லதாவின் 3 மனுக்கள், தவெக வேட்பாளா் செந்தில் பாண்டியன், பாமக வேட்பாளா் வடிவேல் ராவணன், அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழக வேட்பாளா் வேத.முகுந்தன், புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் கே.சுரேந்தா், சுயேச்சை வேட்பாளா் எம்.ஜெய்விஷ்ணுதேவி ஆகியோரின் 11 மனுக்கள் ஏற்கப்பட்டன.

தவாக வேட்பாளா் மா. சத்தியராஜ், சுயேச்சை வேட்பாளா் து. வரதரமேஷ் மற்றும் மாற்று வேட்பாளா்களின் 7 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

வேட்புமனு வாபஸ் பெறுவதற்கு ஏப்.9 ஆம் தேதி கடைசி நாள் என்றும், அன்றைய தினம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும் என தோ்தல் நடத்தும் அலுவலா் தெரிவித்தாா்.