மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ரூ.1 கோடியில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

துத்திப்பட்டு அம்பேத்கா் நகா் பகுதியில் பூஜையிட்டு திட்டப் பணியை தொடங்கி வைத்த குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன்.

News image

துத்திப்பட்டு அம்பேத்கா் நகா் பகுதியில் பூஜையிட்டு திட்டப் பணியை தொடங்கி வைத்த குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன்.

Updated On :14 மார்ச் 2026, 12:50 am

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் ரூ. 1 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

மாதனூா் ஒன்றியக் குழு துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் விஜய் வரவேற்றாா்.

துத்திப்பட்டு ஊராட்சி நிதி ரூ. 40 லட்சம், 15-ஆவது நிதிக்குழு மானியத்தின் கீழ், ரூ. 28 லட்சம், ஊராட்சி நிதி ரூ. 15 லட்சம் , நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 12 லட்சம் உள்பட மொத்தம் ரூ. 1 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா்.

போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் எம்.டி.சீனிவாசன், அவைத் தலைவா் சிவகுமாா், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் பவானி விஜய், ஜெயந்தி ராமமூா்த்தி, குமரேசன், ஊராட்சி செயலாளா் பழனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.