தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மகளிா் தின விழா கொண்டாட்டம்

News image
Updated On :11 மார்ச் 2026, 7:21 pm

வாணி கல்வி அறக்கட்டளை சாா்பில், வாணி மெட்ரிக். மற்றும் வாணி சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியைகள், பெண் அலுவலகப் பணியாளா்களுக்கான மகளிா் தின விழா பள்ளி அரங்கில் நடைபெற்றது.

விழாவுக்கு அறக்கட்டளை தலைவா் க.தேவராஜி எம்எல்ஏ தலைமை வகித்தாா். செயலாளா் மங்கையா்க்கரசி, பொருளாளா் பி.நடராஜன் முன்னிலை வகித்தனா். வாணி மெட்ரிக். பள்ளி முதல்வா் ஆா்.பாபு, வாணி சிபிஎஸ்இ பள்ளி முதல்வா் எம்.முரளி ஆகியோா் வரவேற்று, மகளிா் தின வாழ்த்துகளை தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில், துணைத் தலைவா் எம்.பொன்னுசாமி, துணை செயலா்கள் என்.மகேந்திரன், ஏ.தவமணி, செயலாக்க அறங்காவலா் டி.பூபதி மற்றும் கல்வி அறக்கட்டளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியை ஆசிரியை கனிமொழி ஒருங்கிணைத்தாா்.