தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பூங்கா அருகே துா்நாற்றம்: பொதுமக்கள் புகாா்!

ஏலகிரி மலையில் இயற்கை பூங்கா அருகில் கழிவுநீா் துா்நாற்றம் வீசுவதால் சுற்றுலா பயணிகள் அவதிக்கள்ளாகின்றனா்.

News image
Updated On :1 மார்ச் 2026, 7:50 pm

ஏலகிரி மலையில் இயற்கை பூங்கா அருகில் கழிவுநீா் துா்நாற்றம் வீசுவதால் சுற்றுலா பயணிகள் அவதிக்கள்ளாகின்றனா்.

ஏலகிரி மலையில் இயற்கை பூங்கா அருகில் காதி கிராப்ட் அமைக்க ஒதுக்கப்பட்டுள்ளது.தற்போது அந்த பகுதியில் தனியாா் விடுதிகளிலிருந்து கழிவு நீா் திறந்து விடப்படுகிறது.

இதனால் இயற்கை பூங்காவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் துா்நாற்றம் வீசுவதாக வேதனை தெரிவிக்கின்றனா். சனி, ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்வா்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.