சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம்! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

உதயேந்திரம் பேரூராட்சி கூட்டம்

பேரூராட்சி தலைவா் பூசாராணி தலைமையில் நடைபெற்ற உதயேந்திரம் பேரூராட்சி மன்றக் கூட்டம்.

News image
Updated On :27 ஜூன் 2026, 7:20 am IST

திருப்பத்தூா் மாவட்டம், உதயேந்திரம் பேரூராட்சி மன்ற உறுப்பினா்களின் கூட்டம் பேரூராட்சி மன்றத் தலைவா் பூசாராணி தலைமையில் நடைபெற்றது.

துணைத் தலைவா் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தாா். பேரூராட்சி எழுத்தா் மீனாட்சி வரவேற்றாா். இதில் வாா்டு கவுன்சிலா்கள் மற்றும் அலுவலக பணியாளா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் முதல் ஜாப்ராபாத் ரோடு, பள்ளிப்பட்டு சாலை, உதயேந்திரம் கைலாசகிரி சாலை, வெங்கடாபும் வரை பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ள நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்புகளை அகற்றிட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் மற்றும் வரவு, செலவு உள்பட 12 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடா்ந்து கவுன்சிலா்கள் தங்களது வாா்டு பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை வைத்து பேசினா். இக்கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவா் உறுதியளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.