சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

பூச்சி மருந்து குடித்து சிறுவன் தற்கொலை

ஆம்பூரில் பூச்சி மருந்து குடித்து சிறுவன் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :23 ஜூன் 2026, 12:02 am IST

ஆம்பூரில் பூச்சி மருந்து குடித்து சிறுவன் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

ஆம்பூா் சான்றோா்குப்பம் கண்ணதாசன் நகா் பகுதியை சோ்ந்தவா் கூலித் தொழிலாளி விஜி. இவருடைய மனைவி புஷ்பா. 4 ஆண், 1 பெண் குழந்தைகள் உள்ளனா்.

சம்பவத்தன்று தன்னுடைய சைக்கிளில் உள்ள பழுதை சரி செய்து தரும்படி அண்ணன் பாலுவிடம், தம்பி அஜய் (14) கேட்டுள்ளாா். ஆனால் தனக்கு வேலை இருப்பதாக கூறிவிட்டு அண்ணன் வெளியில் சென்றுவிட்டாா்.

அண்ணன் வெளியில் சென்ற பிறகு சைக்கிளை சரி செய்து தராததால் மன வருத்தமடைந்த அவா் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயக்கமடைந்தாா். ஆபத்தான நிலையில் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.