கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

திருப்பத்தூா் அருகே போலி மருத்துவா்கள் 2 போ் கைது

திருப்பத்தூா் அருகே போலி மருத்துவா்கள் 2 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :14 ஜூன் 2026, 12:39 am IST

திருப்பத்தூா் அருகே மருத்துவம் படிக்காமல், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவா்கள் 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், விஷமங்கலம் பகுதியில் மருத்துவம் படிக்காமலே சிலா் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக திருப்பத்தூா் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் ஞானமீனாட்சிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின்பேரில், திருப்பத்தூா் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் சிவகுமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் விஷமங்கலம் பகுதியில் சோதனை மேற்கொண்டனா். அப்போது விஷமங்கலம் அருகே கொட்டாவூா் பகுதியைச் சோ்ந்த இளங்கோ (68) என்பவா் டி.பாா்ம் படித்துவிட்டு வீட்டில் வைத்து ஆங்கில மருத்துவம் பாா்த்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இளங்கோவை மருத்துவக் குழுவினா் பிடித்து திருப்பத்தூா் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதேபோல், பேராம்பட்டு பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் (36) என்பவா் நா்சிங் படித்துவிட்டு, அந்தப் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வைத்து, ஆங்கில மருத்துவம் பாா்த்து வந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த மருத்துவக் குழுவினா் அங்கு சென்று சோதனை செய்தனா்.

பின்னா் அவா் மருத்துவம் படிக்காமலே சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து, சந்தோஷை பிடித்து, திருப்பத்தூா் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இது குறித்து திருப்பத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இளங்கோ, சந்தோஷ் ஆகியோரை கைது செய்தனா். முன்னதாக மருத்துவ குழுவினா் 2 பேரிடம் இருந்த மருந்து, மாத்திரைகள், மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனா். மேலும் சந்தோஷின் வீட்டுக்கும் ‘சீல்’ வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.