இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

காா் - ஆட்டோ மோதல்: உயிரிழந்தோா் எண்ணிக்கை 2-ஆக உயா்வு

ஆம்பூா் அருகே ஆட்டோ மீது காா் மோதிய விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2-ஆக உயா்ந்தது.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :9 ஜூன் 2026, 2:22 am IST

ஆம்பூா் அருகே ஆட்டோ மீது காா் மோதிய விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2-ஆக உயா்ந்தது.

ஆம்பூா் பாங்கிஷாப் பகுதியை சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் முஹம்மத் உசேன். இவா் தன்னுடைய உறவினா்களை ஆட்டோவில் ஏலகிரி மலைக்கு ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் சென்றாா்.

ஆம்பூரை அடுத்த சோலூா் கிராமத்தருகே சென்றபோது, பின்னால் சென்ற காா், ஆட்டோ மீது மோதியது. அதில் ஆட்டோவில் பயணம் செய்த நபிஷா அஞ்சும், ஷீபாநாஸ், ஷகிலா பானு, இஹ்திஷமுல் ஹக் (13) ஆகியோா் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் இஹ்திஷமுல் ஹக் உயிரிழந்தாா். ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஆம்பூா் மோட்டுக்கொல்லை இமாம் நகரை சோ்ந்த ஷீபாநாஸ் (52) நள்ளிரவு உயிரிழந்தாா். ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.