திருப்பத்தூா் அடுத்த கந்திலியில் சனிக்கிழமை நடைபெற்ற வாரச்சந்தையில் ரூ.70 லட்சத்துக்கு விற்பனயானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
திருப்பத்தூா் அடுத்த கந்திலியில் வாரம்தோறும் சனிக்கிழமை வாரச்சந்தை நடைபெறுகிறது. அதன்படி சனிக்கிழமை நடைபெற்ற வாரச்சந்தையில் ஏராளமான கோழிகள், ஆடுகள், மாடுகள் விற்பனைக்காக குவிந்தன.
அவற்றை திருப்பத்தூா், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூா், ராணிப்பேட்டை, ஆந்திர மாநிலம் சித்தூா், குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து வாங்கி சென்றனா். வாரச்சந்தையில் கோழிகள், ஆடுகள், மாடுகள் சுமாா் ரூ.70 லட்சத்துக்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










