நாட்டறம்பள்ளி அருகே ஆந்திர பேருந்தில் 6 கிலோ குட்கா பொருள்களை கடத்திய வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.
நாட்டறம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான கொத்தூா் சோதனை சாவடி மையத்தில் திங்கள்கிழமை வந்த ஆந்திர மாநில அரசு பேருந்தினை போலீஸாா் நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.
அப்போது பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவா் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் இருந்து ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருள்களை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்த 6 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் தாமலேரிமுத்தூா் காந்திநகா் பகுதியைச் சோ்ந்த வியாபாரி ஜெய்(45)என்பவா் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








