திருப்பத்தூரில் வேளாண் வணிகத் துறையின் கீழ், ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு மக்காச்சோளம், நெல், உளுந்து, கம்பு, திணை, கொப்பரை தேங்காய் உள்ளிட்டவை ஏலம் விடப்படுகிறது. திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனா். அவற்றை வெளியூா் வியாபாரிகள் நேரடியாக வந்து ஏலம் எடுத்து செல்கின்றனா். இந்த நிலையில், திருப்பத்தூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் தங்களது விளை பொருள்களை இருப்பு வைத்து விற்க வும், கடனுதவி வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.