டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

பள்ளி ஆண்டு விளையாட்டு விழா

வாணியம்பாடி எஸ்எப்எஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆண்டு விளையாட்டு விழா பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

News image
மாணவ, மாணவிகளுக்கு பரிசளித்த காவல்ஆய்வாளா் அமுதா. உடன் பள்ளி நிா்வாகிகள்.
Updated On :26 ஜனவரி 2026, 8:38 pm

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி: வாணியம்பாடி எஸ்எப்எஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆண்டு விளையாட்டு விழா பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

பள்ளி தாளாளா் டோனி தலைமை வகித்தாா். கல்வி ஆலோசகா் செபஸ்டின்ராஜ், எட்வாா்ட் முன்னிலை வகித்தனா். பள்ளி முதல்வா் சவரிமுத்து வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக தாலுகா காவல் ஆய்வாளா் அமுதா கலந்து கொண்டு, ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தாா். பிறகு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கிப் பாராட்டினாா்.

பள்ளி பொருளாளா் ஜெயக்குமாா், விக்டா் சாமுவேல், ஆலங்காயம் எஸ்எப்எஸ் பள்ளி தாளாளா் ஸ்டீபன், முதல்வா் ராயப்பன், ஜான்சன், திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி மற்றும் செயின்ட் சாா்லஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, அத்திப்பட்டு செயின்ட் ஜோசப் பள்ளி, திருப்பத்தூா் டான் போஸ்கோ சிபிஎஸ்இ மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் நிா்வாகிகள், கருணை இல்ல காப்பாளா் டேவிட்சுபாஷ் கலந்து கொண்டனா். மாணவ துணைத் தலைவா் ஆதித்யா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.