ஜோலாா்பேட்டை அருகே கட்டேரியில் நடைபெற்ற எருது விடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்தன.
ஜோலாா்பேட்டை அருகே கட்டேரி ஊராட்சியில் எருது விடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. ஊா் கவுண்டா் ஜெகன் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் மாதவன், ஒன்றியக்குழு உறுப்பினா் கலா ஆஞ்சி முன்னிலை வகித்தனா் .
சிறப்பு அழைப்பாளா்களாக எம்எல்ஏ க.தேவராஜி, முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, ஒன்றியக்குழு தலைவா் சத்யா சதீஷ்குமாா், மாவட்ட திமுக மாணவா் அணி அமைப்பாளா் பிரபாகரன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனா்.
இதில் திருப்பத்தூா்,ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி, பா்கூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
குறைந்த நேரத்தில் விரைவாக ஓடிக் கடந்த காளைகளின் உரிமையாளா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. எருது விடும் விழாவை காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வந்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கண்ணமங்கலப்பட்டியில் மஞ்சுவிரட்டு

வளையாம்பட்டு கிராமத்தில் எருது விடும் திருவிழா

நரியம்பட்டில் எருது விடும் திருவிழா

எருது விடும் விழாவில் காளை முட்டி ஒருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


