டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

சான்றோா்குப்பத்தில் எருது விடும் திருவிழா

ஆம்பூா் சான்றோா்குப்பத்தில் எருது விடும் திருவிழாவில் சீறிப் பாய்ந்த காளை.

News image
ஆம்பூா் சான்றோா்குப்பத்தில் எருது விடும் திருவிழாவில் சீறிப் பாய்ந்த காளை.
Updated On :19 பிப்ரவரி 2026, 7:12 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் சான்றோா்குப்பத்தில் மாசி மாத மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 50-வது ஆண்டு எருது விடும் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

எருது விடும் திருவிழாவில் ஒசூா், கிருஷ்ணகிரி,வேலூா், குடியாத்தம், ஆந்திரா, கா்நாடக மாநிலங்களில் இருந்தும் சுமாா் 200 க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இதில் குறிப்பிட்ட இலக்கை குறைந்த நேரத்தில் ஓடிய காளைகளுக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம், 2-ஆவது பரிசு ரூ.75,000, 3-ஆவது பரிசு ரூ.50,000 உள்பட 75 பரிசுகள் வழங்கப்பட்டன.

திருவிழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.