//

காலமானார் தமிழறிஞர் ச.மு.விமலானந்தன் (94)

திருப்பத்தூர் தமிழ்ச் சங்கத் தலைவர் ச.மு.விமலானந்தன் (94) புதன்கிழமை காலமானார்.

News image
Updated On :18 பிப்ரவரி 2026, 9:33 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூர் தமிழ்ச் சங்கத் தலைவர் ச.மு.விமலானந்தன் (94) புதன்கிழமை காலமானார்.

தினமணியின் நீண்டநாள் வாசகரும், தினமணியில் கடிதங்களும், கட்டுரைகளும் எழுதியவருமான முதுபெரும் புலவர், நல்லாசிரியர், தமிழாசிரியர் மற்றும் திருப்பத்தூர் தமிழ்ச் சங்கத் தலைவருமான ச.மு.விமலானந்தன் புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் காலமானார்.

அவருக்கு அனுசுயா என்ற மனைவியும், கலாராணி, சாந்தி என 2 மகள்களும், புகழேந்தி, திருநாவுக்கரசு, விவேகானந்தன் என 3 மகன்களும் உள்ளனர். மகன் விவேகானந்தன் வருமானவரித் துறையில் முதன்மை ஆணையராக உள்ளார்.

மறைந்த விமலானந்தனின் கண்கள், உடல் தானமாக திருப்பத்தூர் உதவும் கரங்கள் அமைப்பு மூலம் வழங்கப்பட உள்ளது.

அவர் தினமணியில் எழுதிய கடிதங்கள் "மணியில் ஒளிர்ந்த மணிகள்' என்ற புத்தகமாக வெளிவந்தது.

அவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் திருப்பத்தூர் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பேஸ்-2- இல் நடைபெறும். தொடர்புக்கு: 9442411522.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.