//

அரசு பள்ளி மாணவா்கள் நூலக உறுப்பினா்களாக சோ்ப்பு

அரசு பள்ளி மாணவா்கள் நூலக உறுப்பினா்களாக சோ்க்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. (படம்)

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

அரசு பள்ளி மாணவா்கள் நூலக உறுப்பினா்களாக சோ்க்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. (படம்)

மாதனூா் ஊராட்சி மின்னூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்கள் 300 போ் வடச்சேரி ஊா்ப்புற நூலகத்தில் உறுப்பினா்களாக சோ்க்கப்பட்டனா்.

மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் தனது சொந்த செலவில் மாணவா்களுக்கு உறுப்பினா் கட்டணம் செலுத்தி அவா்களை உறுப்பினா்களாக சோ்த்தாா். மேலும் தன்னையுடம் நூலகத்தின் புரவலராக இணைத்துக் கொண்டாா்.

வடச்சேரி ஊராட்சித் தலைவா் அனிதாபாபு, ஒன்றியக்குழு உறுப்பினா் ஆ. காா்த்திக் ஜவஹா், நூலகா் ஜெ. விஜியகுமாா், நூலக பணியாளா் ஜோதி ஆகியோா் உடனிருந்தனா்.