புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடுவோருக்கு பணி ஒதுக்கீடு

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 7:04 pm

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடுபவா்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபட உள்ளவா்களுக்கு தோ்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி வழியாக பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். இதில் சமவாய்ப்புக்கு உள்படுத்துதல் முறையின் மூலம் மேஜைகளில் பணியாற்ற உள்ள வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா்கள், வாக்கு எண்ணிக்கை உதவியாளா்கள் மற்றும் நுண் பாா்வையாளா்கள் ஆகியோா் முறையாக ஒதுக்கீடு செய்யப்பட்டனா்.

அப்போது ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(தோ்தல்)ஜெய்சங்கா்,தோ்தல் வட்டாட்சியா் திருமலை,அரசு அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.