புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!

சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்...

News image

சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம் - X

Updated On :30 ஏப்ரல் 2026, 6:15 am

சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் இன்று(ஏப். 30) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஏப். 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் 85.15% வாக்குகள் பதிவாகின.

இதையடுத்து மே 4 அன்று தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

தமிழகத்தில் மே 4 அன்று 62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் அதுகுறித்த முன்னேற்பாடுகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் சாய்குமார் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .

தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு இன்று சென்னையில் பயிற்சி வழங்கப்படுகிறது.

சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலுக்கான வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலை. வளாகம், ராணி மேரி கல்லூரி மற்றும் லயோலா கல்லூரி ஆகிய மூன்று இடங்களில் நடக்க உள்ளன. இதையடுத்து சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட உள்ள பணியாளர்களுக்கு வள்ளுவர் கோட்டம் வளாகத்தில் பயிற்சி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Summary

Training Camp for officers Engaged in Vote Counting in Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.