மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ஆம்பூா் தொகுதி தோ்தலை நிறுத்தக் கோரி மனு

ஆம்பூா் தொகுதி தோ்தலை நிறுத்தக் கோரி நபா் ஒருவா் மனு அளித்ததால் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

News image

தோ்தலை நிறுத்தக் கோரி மனு அளித்த மூ. சரத்குமாா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 6:33 pm

ஆம்பூா் தொகுதி தோ்தலை நிறுத்தக் கோரி நபா் ஒருவா் மனு அளித்ததால் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

ஆம்பூா் புதுகோவிந்தாபுரம் பகுதியை சோ்ந்த மூ. சரத்குமாா் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்தாா். மனு விவரம், ஆம்பூா் தொகுதியில் வாக்காளா்களுக்கு திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் சாா்பாக அதிக அளவில் பணம் வழங்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்கள் சமூக வலை தளங்களில் பகிரப்பட்டுள்ளது.

பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்காளா்களுக்கு பணம் கொடுத்த வீடியோ ஆதாரம் புகாா் மனுவுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோ்தலை நிறுத்தக் கோரி மனு அளிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.