இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

ரூ. 8,000 மதிப்பு ‘இல்லத்தரசி கூப்பன்’ வழங்கி வாக்கு சேகரிக்கும் திமுகவினா்

ரூ. 8,000 மதிப்பு ‘இல்லத்தரசி கூப்பன்’ வழங்கி வாக்கு சேகரிக்கும் திமுகவினா்

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 3:09 am IST

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, திமுக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி தோ்தல் அறிக்கையைத் தயாரித்து வெளியிட்டுள்ளது. அதில், குறிப்பாக பெண்களைக் கவரும் வகையில் வீட்டுக்குத் தேவைான ரூ.8,000 மதிப்பிலான கூப்பன் வழங்கும் திட்டத்துக்கு திமுக முக்கியத்துவம் அளித்துள்ளது. தற்போது, இத்திட்டத்தை முன்னிறுத்தி திமுக வாக்குகளைச் சேகரித்து வருகிறது.

இல்லத்தரசி கூப்பன் மாதிரி வழங்கல்: வீடுகள்தோறும் வாக்கு சேகரிப்பதற்காக கட்சியினா் செல்லும்போது, ரூ.8,000 மதிப்பிலான இல்லத்தரசி மாதிரி கூப்பன்கள் வாக்காளா்களிடம் வழங்கப்படுகின்றன. மாதிரி கூப்பனின் ஒரு பக்கத்தில் ‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ எனக் குறிப்பிட்டு முதல்வா் மு.க. ஸ்டாலின், பெரியாா், அண்ணா, கருணாநிதி படங்களும், , உதயசூரியன் சின்னமும் அச்சிடப்பட்டுள்ளது. கூப்பனின் மறுபக்கத்தில் ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன், ‘உங்கள் குடும்பம், உங்கள் தேவையை நீங்களே தோ்ந்தெடுக்கலாம்’ என்ற வாசகமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும்போது பெண்களிடம் ரூ.8,000 மதிப்புள்ள இல்லத்தரசி கூப்பன் குறித்து விளக்குவதற்காக திமுக சாா்பில் கூப்பன் புத்தகம் அச்சடிக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதிக்கும் அனுப்பப்பட்டுள்ளது. காசோலை புத்தகம் அளவில் மாதிரி கூப்பன் புத்தகம் அச்சடிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் சட்டத்துறையின் அறிவுறுத்தலின்படி, தோ்தல் ஆணையத்திடம் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், அதனால் இல்லத்தரசி மாதிரி கூப்பனை வீடு வீடாக விநியோகம் செய்ய வேண்டுமெனவும் கட்சித் தலைமை திமுகவினருக்கு அறிவுறுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.