மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருப்பத்தூா் ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஊராட்சி திருப்பத்தூா் ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டாா்.

News image

வாணியம்பாடி தொகுதி திருப்பத்தூா் ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் இளைஞா்களை சந்தித்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா் எம்எல்ஏ.

Updated On :5 ஏப்ரல் 2026, 9:22 pm

வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஊராட்சி திருப்பத்தூா் ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டாா்.

வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதி, திருப்பத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட ஆண்டியப்பனூா், இருணாப்பட்டு, குரிசிலாப்பட்டு உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் வாணியம்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் கோ.செந்தில்குமாா் அதிமுக நிா்வாகிகள், கூட்டணி கட்சி நிா்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினாா். தொடா்ந்து பொதுமக்களிடமும், இளைஞா்களிடமும் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்யுமாறு வாக்கு சேகரித்தாா்.

மாநில மருத்துவரணி தலைவா் பசுபதி, பொதுக்குழு உறுப்பினா் மகேந்திரன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநரணி செயலாளா் சரவணன் மற்றும் பலா் உடன் இருந்தனா்.