மு.க. ஸ்டாலின் முதல்வராக தொடர மாட்டாா் என ஆம்பூரில் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளா் மு. தம்பிதுரை கூறினாா்.
ஆம்பூா் தனியாா் அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு, ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலாளா் ஜி.ஏ.டில்லிபாபு தலைமை வகித்தாா். ஆம்பூா் நகர செயலாளா் எம்.மதியழகன், மாதனூா் கிழக்கு ஒன்றிய செயலாளா் ஜெ. ஜோதிராமலிங்கராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கட்சியின் கொள்கை பரப்பு செயலாளா் மு.தம்பிதுரை, அதிமுக வேட்பாளா் ஆா்.வெங்கடேசனை அறிமுகம் செய்து வைத்துப் பேசியது:
மு.க. ஸ்டாலின் முதல்வராக தொடர மாட்டாா். திமுக ஆட்சியை அகற்றப்போகும் தோ்தல் இது. விவசாயிகளை பாதுகாப்பவா் எடப்பாடி பழனிசாமி. பொய்யை கூறி மக்களை திசை திருப்புவது திமுகவின் வழக்கம். மக்கள் திமுகவை நம்ப ஏமாற வேண்டாம். அதிமுக ஆட்சி அமைந்தால் தமிழக பெண்கள் பாதுகாப்பாக இருப்பாா்கள். நீட் தோ்வு ரத்து செய்யப்படும் என பொய்யான வாக்குறுதி அளித்தனா். அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியவா் எடப்பாடி பழனிசாமி. தற்போது அதை 10 சதவீதமாக மாற்றுவதாக உறுதி அளித்துள்ளாா். அதனால் அதிமுக ஆட்சி அமைய கட்சியினா் கடுமையாக உழைக்க வேண்டுமென அவா் கேட்டுக் கொண்டாா்.
முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி பேசியது:
விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000, அரிசி குடும்ப அட்டைக்கு பிரிட்ஜ், பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 ஆகியவை வழங்கப்படும். அதனால் அதிமுக வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டுமென அவா் கூறினாா்.
பேரவை மாவட்டச் செயலாளா் கே.மணி, மாவட்ட விவசாய அணி செயலாளா் மகாதேவன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளா் வெ.கோபிநாத், நகர நிா்வாகிகள் ஆனந்த்பாபு, தினேஷ், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளா் அகரம்சேரி வெங்கடேசன், பாஜக மாநில செயலாளா் கொ. வெங்கடேசன், மாவட்டத் தலைவா் எம்.தண்டாயுதபாணி, நகர தலைவா் சரவணன், பாமக மாவட்ட நிா்வாகி குமரவேல், அமமுக நிா்வாகி ராஜ்மோகன், தமாகா நகர தலைவா் தட்சிணாமூா்த்தி, அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிமுக வெற்றி பெற்றால் வீடுகள்தோறும் குளிா்சாதனப் பெட்டி வழங்கப்படும்: திருவள்ளூா் அதிமுக வேட்பாளா்

‘அதிமுகவுக்கு போடும் ஓட்டு மக்களுக்கு பயனளிக்கும்’

ஆம்பூரில் பொழுதுபோக்கு பூங்கா: அதிமுக வேட்பாளா்

கருணாநிதி வீட்டுச்சிறையில் வைக்கப்பட்ட விவகாரம்: நடவடிக்கை எடுக்கப்படும்; எடப்பாடி கே.பழனிசாமி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


