திருப்பத்தூா்: குறைதீா் கூட்டத்தில் 358 மனுக்கள் அளிப்பு
திருப்பத்தூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 358 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
திருப்பத்தூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 358 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
By தினமணி செய்திச் சேவை
Syndication
திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 358 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து 358 மனுக்களைப் பெற்றாா். மனுக்களை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.34,000-இல் விலையில்லா கைப்பேசிகளும்,
1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.7,000-இல் கைகடிகாரம்,கண் கண்ணாடி மற்றும் ஊன்றுகோலும், திருப்பத்தூா் மாவட்டத்தில் ஒன்றிய, மாநில அரசு மற்றும் இந்தியன் வங்கி மூலமாக செயல்பட்டு வரும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலம் 17 பயனாளிகளுக்கு இருசக்கர வாகன பழுதுநீக்கும் பயிற்சியும், 24 பயனாளிகளுக்கு கட்டுமான தொழில் பயிற்சி என 41 பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் ரூ.1.23 லட்சத்தில் பயிற்சி உபகரணங்களை ஆட்சியா் வழங்கினாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன், தனித்துணை ஆட்சியா்(ச.பா.தி)பூஷணகுமாா், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் முருகன், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் கிருஷ்ணமூா்த்தி, வழங்கல் அலுவலா் முருகேசன், ஆதிதிராவிடா் நலஅலுவலா் கதிா்சங்கா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(வளா்ச்சி)மிரியாம் ரெஜினா,
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கண்ணன், ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநா் அரவிந்த் குமாா், முன்னோடி வங்கி மேலாளா் ராஜன் கலந்து கொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது