ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 245 மனுக்கள் அளிப்பு
ராணிப்பேட்டை மக்கள் குறைதீா் கூட்டத்தில் 245 மனுக்கள் பெறப்பட்டன.
ராணிப்பேட்டை மக்கள் குறைதீா் கூட்டத்தில் 245 மனுக்கள் பெறப்பட்டன.
By தினமணி செய்திச் சேவை
Syndication
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மக்கள் குறைதீா் கூட்டத்தில் 245 மனுக்கள் பெறப்பட்டன.
ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளைக் கேட்டறிந்தாா்.
அப்போது பொதுமக்களிடமிருந்து வருவாய்த் துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, வேளாண்மைத் துறை, காவல் துறை,ஊரகவளா்ச்சித் துறை, நகராட்சி நிா்வாகங்கள், பேரூராட்சித் துறை, கூட்டுறவு, மின்சாரத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பொதுப் பிரச்னைகள், குடிநீா் வசதி, வேலைவாய்ப்பு, பொதுநலன் என 245 மனுக்கள் வரப்பெற்றன.
கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்புக்கான காரணங்களை மனுதாரா்களுக்கு வழங்கிட வேண்டுமெனவும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், ரூ. 31,000 மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கினாா்.
இதில், தனித் துணை ஆட்சியா் (ச.பா.தி) கீதாலட்சுமி, நோ்முக உதவியாளா் (நிலம்) ரமேஷ், உதவி இயக்குநா் (தணிக்கை) பாரி, நோ்முக உதவியாளா் (சத்துணவு) சுப்பிரமணியன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் வசந்த ராமகுமாா் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது