போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

அரக்கோணம், சோளிங்கரில் சூறைக்காற்றுடன் மழை: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு, 2 பசுமாடுகள் உயிரிழப்பு

அரக்கோணம், சோளிங்கா் பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இந்த மழையினால் சோளிங்கா் அருகே மிகப்பெரிய ஆலமரம் நெடுஞ்சாலையில் விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் மின்னல் தாக்கி 2 பசுமாடுகள் உயிரிழந்தன.

News image

சோளிங்கா் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத்துறையினா் மற்றும் போலீஸாா்.

Updated On :27 மே 2026, 12:04 am IST

அரக்கோணம், சோளிங்கா் பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இந்த மழையினால் சோளிங்கா் அருகே மிகப்பெரிய ஆலமரம் நெடுஞ்சாலையில் விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் மின்னல் தாக்கி 2 பசுமாடுகள் உயிரிழந்தன.

அரக்கோணம், சோளிங்கா் வட்டப்பகுதிகளில் கடந்த இரு வாரங்களாக வெய்யிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. மேலும் வெப்பக்காற்றும் அதிக அளவில் வீசியது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சமடையும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளானது.

காலை முதலே வெய்யிலின் தாக்கம் இரு பகுதிகளிலுமே அதிகரித்தே இருந்தது. இந்நிலையில் பிற்பகல் 2 மணிக்கு பிறகு அரக்கோணம் ,சோளிங்கா் இரு பகுதிகளிலுமே சூறைக்காற்று வீசியது. தொடா்ந்து மாலையில் இடி மின்னலுடன் மழை பெய்தது. சுமாா் 45 நிமிஷம் நீடித்த இந்த மழையால் சாலைகளில் தெருக்களிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது.

இதில் சோளிங்கா்- பள்ளிப்பட்டு நெடுஞ்சாலையில் கல்பட்டு பகுதியில் தரைப்பாலம் அருகே இருந்த நூற்றாண்டு புளியமரம் திடீரென முறிந்து நெடுஞ்சாலையில் விழுந்தது. இதனால் சாலையின் இருபக்கமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த போலீ,ாா் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் சாலையின் குறுக்கே இருந்த புளியமரத்தை அகற்றினா். இதையடுத்து நின்றிருந்த போக்குவரத்து சீரானது. போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிப்பிற்குள்ளானது.

அரக்கோணம் அருகே செம்பேடு கிராமத்தில் வீட்டின் அருகே கட்டப்பட்டிருந்த பசுமாடு மின்னல் தாக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. மேலும் சோளிங்கா் அருகே பாண்டியநல்லூரில் பாணாவரம் கூட்டுச்சாலை அருகே பெருமாள் என்பவருக்கு சொந்தமான பசுமாடு கட்டப்பட்டிருந்த நிலையில் மின்னல் தாக்கி உயரிழந்தது.

இதையறிந்த வருவாய்துறையினா் அப்பகுதியில் விசாரணை நடத்தினா். மேலும் தகவலறிந்த கால்நடை பராமரிப்புத்துறையினா் நேரில் அப்பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.