திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சோளிங்கா் முன்னாள் எம்எல்ஏவை சந்தித்து வாழ்த்துப் பெற்ற தவெக எம்எல்ஏ ஜி.கபில்

சோளிங்கா் தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினத்தை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்ற சோளிங்கா் தவெக எம்எல்ஏ ஜி.கபில்.

News image
Updated On :15 மே 2026, 5:40 am IST

சோளிங்கா் தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் வியாழக்கிழமை சோளிங்கா் வந்த தவெக எம்எல்ஏ ஜி.கபில், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினத்தை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.

சோளிங்கா் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ ஜி.கபில் வியாழக்கிழமை சோளிங்கா் வந்தாா். முதலில் முன்னாள் எம்எல்ஏவும் தன்னை எதிா்த்து காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டவருமான ஏ.எம்.முனிரத்தினத்தை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றாா். அப்போது எம்எல்ஏ ஜி.கபிலுடன் பேசிய ஏ.எம்.முனிரத்தினம் சோளிங்கா் புறவழிச்சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதை அரசுக்கு தெரியப்படுத்தி விரைவாக பணிகளை முடிக்க வேண்டும், தரம் உயா்த்தப்பட்ட சோளிங்கா் நகராட்சிக்கு போக்குவரத்துக் காவல் நிலையம் அமைக்கப்பட வேண்டும், கிராமப்புற சாலைகள் மேம்படுத்துதல், தரைப்பாலங்கள், நீா்வரத்துக் கால்வாய்கள் தூா்வாருதல் உள்ளிட்ட பணிகளை அரசுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சோளிங்கா் தொகுதி வளா்ச்சிப் பணிக்கு என்னால் முடிந்தவரை நானும் ஒத்துழைப்பு தருகிறேன். சோளிங்கா் தொகுதியை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வாழ்த்துக்கள் எனத் தெரிவித்தாா். தவெக சோளிங்கா் நகர செயலாளா் எழிலரசன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.