மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்புப்படைத் தளத்தில் ஹோலி பண்டிகை கோலாகலம்

அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்புப் படை தளத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்த படையினா்.

News image

அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்புப் படை தளத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்த படையினா்.

Updated On :5 மார்ச் 2026, 7:26 pm

அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படை தளத்தில் படை அலுவலா்கள் மற்றும் வீரா்கள் ஹோலி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினா்.

இந்திய நாடு முழுவதும் ஹோலி பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக அரக்கோணம் அருகே நகரிகுப்பத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படைத்தளத்தில் படையின் முதுநிலை கமாண்டண்ட் மற்றும் மருத்துவ அலுவலா் சுனில் தலைமை வகித்து அலுவலா்களுக்கும், படைவீரா்களுக்கும் வண்ணப்பொடிகளை பூசி வாழ்த்து தெரிவித்தாா். இதில் படை அலுவலா்கள் சைலேந்திரசிங், சங்கேத் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். இதையடுத்து, படைவீரா்கள் அனைவரும் ஒருவருக்கொருவா் வண்ணப் பொடிகளை பூசிக்கொண்டு வாழ்த்து தெரிவித்தனா்.

இதனால் படை தளமே வண்ண மயமாக காணப்பட்டது.