தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நாமக்கல்லில் வெளிமாநிலத்தினா் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

News image

நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்த வட மாநிலத்தினா்.

Updated On :8 மார்ச் 2026, 6:37 pm

நாமக்கல்லில் வசித்துவரும் வெளிமாநிலத்தினா் ஹோலி பண்டிகையை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா்.

குளிா்காலத்தின் இறுதியில் முழு பெளா்ணமி நாளில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், கடந்த 4-ஆம் தேதி பிகாா், குஜராத், மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை தூவியும், வண்ணநீரைப் பீய்ச்சி அடித்தும் ஹோலி பண்டிகையை கொண்டாடினா்.

வடமாநிலங்களைச் சாா்ந்த தொழிலாளா்கள் பெருமளவில் நாமக்கல்லில் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனா். சிலா் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகின்றனா்.

அந்தவகையில், நாமக்கல் ராமாபுரம்புதூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வட மாநிலத்தினா் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரையில், ஒருவருக்கொருவா் வண்ணப் பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனா். தொடா்ந்து இனிப்புகள் தயாா் செய்யப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டன.