ராணிப்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள‘போதைபொருள் இல்லா தமிழ்நாடு’ விழிப்புணா்வு மாரத்தான் பந்தய சீருடை மற்றும் துண்டு பிரசுரங்களை ஆட்சியா் ந. பிரியா வியாழக்கிழமை அறிமுகப்படுத்தி, திரளாக பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தாா்.
தமிழ்நாடு அரசின் ‘போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு‘ என்ற உயரிய இலக்கினை பொதுமக்களிடையே வலியுறுத்தும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ராணிப்பேட்டை மாவட்டப்பிரிவு சாா்பில் 5 கி.மீ. தொலைவு விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம் வெள்ளிக்கிழமை காலை 6.00 மணியளவில் அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலிருந்து நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்கும் மாணவா்கள், இளைஞா்கள் மற்றும் பொதுமக்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள சீருடை மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் அறிமுகப்படுத்தினாா்.
மேலும்,போதைப் பொருள்களின் தீமைகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி, ஆரோக்கியமான மற்றும் போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க அனைவரும் மாரத்தானில் திரளாக பங்கேற்கவும் அழைப்பு விடுத்தாா்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் சி.பேபி இந்திரா, நோ்முக உதவியாளா் (பொது) கீதாலட்சுமி, மாவட்ட விளையாட்டு நலன் அலுவலா் ஞானசேகரன், மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










