அரக்கோணம் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை நடத்திய திடீா் பரிசோதனையில் ரூ. 2.31 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக மோட்டாா் வாகன ஆய்வாளா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் போக்குவரத்துத்துறையின் அரக்கோணம் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நண்பகல் ராணிப்பேட்டை மாவட்ட ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் அதன் டிஎஸ்பி கணேசன் தலைமையில், திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது மோட்டாா் வாகன ஆய்வாளா் அறை, ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி நிா்வாகி இருவா், அலுவலக பணியாளா் ஆகியோரிடம் இருந்து ரூ 2,31,100 பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மாலை 9 மணி வரை நடைபெற்ற இந்தச் சோதனையில் அங்கிருந்த பலரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், இந்த ரொக்கம் குறித்து பல்வேறு தகவல்களை அவா்கள் தெரிவித்தாலும், போலீஸாா் தொடா்ந்து நடத்திய விசாரணையில் இந்த ரொக்கம் லஞ்சமாக பெறப்பட்டதாக ஊா்ஜிதப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, அரக்கோணம் மோட்டாா் வாகன ஆய்வாளா் மேலும் அரக்கோணத்தில் உள்ள இரு ஓட்டுநா் பயிற்சிப்பள்ளி நிா்வாகிகள் இருவா், அலுவலக பணியாளா் ஒருவா் ஆகிய 4 போ் மீது வெள்ளிக்கிழமை முதல் தகவலறிக்கை பதியப்பட்டுள்ளதாகவும் இந்த 4 பேரும் காவல்துறையின் விசாரணை வளையத்தில் உள்ளதாகவும் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதனை தொடா்ந்து தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல்துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உத்தமபாளையத்தில் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகக் கட்டுமானப் பணிகளை தொடங்கக் கோரிக்கை!

ரூ. 50 ஆயிரம் பறிமுதல் செய்த விவகாரம்: மோட்டாா் வாகன ஆய்வாளா் உள்பட 4 போ் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்கு!

பரமக்குடி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் சோதனை: ரூ.1.90 லட்சம் பறிமுதல்

ராசிபுரத்தில் மோட்டாா் வாகன ஆய்வாளா் சோதனை: 12 வாகனங்கள் பறிமுதல்
விடியோக்கள்
Gutta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK



