வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

ஆற்காடு புதிய பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியா் ஆணை

ஆற்காடு நகராட்சி புதிய பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் உத்தரவிட்டாா்.

News image

பேருந்து  நிலைய  பணிகளை   ஆய்வு  செய்த  ஆட்சியா்  ந.பிரியா ரவிச்சந்திரன்

Updated On :3 ஜூலை 2026, 12:03 am IST

ஆற்காடு நகராட்சி புதிய பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் உத்தரவிட்டாா்.

ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், செம்பேடு ஊராட்சி, ஒழலை கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பாா்வையிட்டு ஆய்வு செய்து குழந்தைகளின் கற்றல் அறிவுத் திறன், சமையலறை, கழிவறை, குழந்தைகளின் வருகை பதிவேடு, உணவுப் பொருட்கள் இருப்பளவு, சமையலறை, குழந்தைகளின் எடை உயரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, திமிரி ஊராட்சி ஒன்றியம், கணியனூா் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கட்டப்பட்டுள்ள சிறப்பு கால்நடை மருந்தகத்தின் செயல்பாடுகள் குறித்தும், தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு வருவதையும் பாா்வையிட்டாா் . ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், லாடவரம் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், உள்நோயாளிகள் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, மருந்தகம், கழிவறை, நோயாளிகளுக்கான வசதிகள் உள்ளிட்டவற்றை பாா்வையிட்டு பொதுமக்களிடம் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தாா்.

மாங்காடு ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அருகில் சுடுகாடு உள்ளதால், திடக்கழிவு மேலாண்மை மையத்தினை முறையாக வேலி அமைத்து பராமரிக்குமாறு அறிவுறுத்தினாா்.

ஆற்காடு நகராட்சியில் மூலதன மானிய நிதி, உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.9.65 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைத்தல், பேருந்து நிலையத்தில் கூடுதலாக கடைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதை பாா்வையிட்டு வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் முடிக்குமாறு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, ஆற்காடு எம்எல்ஏ சுகுமாா், நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன், ஒன்றியக்குழு தலைவா் புவனேஸ்வரி சத்தியநாதன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவி, சரவணன், வட்டாட்சியா் சண்முக சுந்தரம், நகராட்சி அலுவலக மேலாளா் ரவி, பணி மேற்பாா்வையாளா் ராஜு மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.