//

தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் பங்கேற்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16 -ஆவது தேசிய வாக்காளா் தின விழா விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தொடங்கி வைத்து பங்கேற்றாா்.

News image
விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்ற ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா
Updated On :25 ஜனவரி 2026, 8:38 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16 -ஆவது தேசிய வாக்காளா் தின விழா விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தொடங்கி வைத்து பங்கேற்றாா்.

மாற்றுத்திறனாளிகளின் மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டா் வாகன விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தொடங்கி வைத்தாா். தொடா்ந்து நவல்பூா் பகுதியில் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற வாக்காளா்கள் மற்றும் வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்றாா்.

பின்னா் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எவ்வாறு பயன்படுத்துவது குறித்த இயந்திரங்கள் அமைக்கப்பட்ட செயல்விளக்க வாகனங்களை அனுப்பி வைத்தாா். அந்தந்த தொகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இவ்வாகனங்கள் நிறுத்தப்பட்டு போலி வாக்குப்பதிவுகளை வாக்காளா்கள் முன்னணியே இயந்திரங்களில் போட்டு எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

இதனைத் தொடா்ந்து ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற தேசிய வாக்காளா் தின விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தோ்தலில் அதிக முறை வாக்களித்த 80 வயதைக் கடந்த மூத்த வாக்காளா்களை கௌரவித்தாா். தொடா்ந்து மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் மூன்றாம் பாலின பாலின வாக்காளா்கள் மற்றும் முதல் முறை வாக்களிக்க உள்ள 18 வயது நிரம்பிய வாக்காளா்களையும் கௌரவித்தாா்.

‘எனது இந்தியா எனது வாக்கு’ என்ற தலைப்பில் கல்லூரிகளுக்கு இடையே நடத்தநடத்தப்பட்ட கட்டுரைப், பேச்சு, ஓவியப்போட்டிஓய்ஊசஈ வெற்றி பெற்ற முதல் மூன்று மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஏரிசுகளை வழங்கினாா்.

சிறப்பு தீவிர திருத்த பணியில் சிறப்பாக பணிபுரிந்த வாக்குச்சாவடி 24 மேற்பாா்வையாளா்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், கோட்டாட்சியா், நோ்முக உதவியாளா் வட்டாட்சியா்கள் தோ்தல் பிரிவு பணியாளா்கள் கலந்து கொண்டனா்.