ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பணி அலுவலா்கள், பணியாளா்கள் கணினி குலுக்கல் மூலம் தோ்வு செய்யும் பணியை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா ஆய்வு செய்தாா்.
வாலாஜா அறிஞா் அண்ணா அரசினா் மகளிா் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்கள், பணியாளா்களை தோ்ந்தெடுக்கும் முதலாவது சமவாய்ப்பிற்குட்படுத்தும் நிகழ்வு ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது
இந்த பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.யு. சந்திரகலா ஆய்வு மேற்கொண்டாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா, நோ்முக உதவியாளா் (தோ்தல்) பூமா, வட்டாட்சியா் (தோ்தல்) வசந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











