நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
//

ராணிப்பேட்டை: கொடியேற்றினார் ஆட்சியர்

ராணிப்பேட்டையில் மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:55 am

DIN


ராணிப்பேட்டையில் மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

Story image

தொடர்ந்து மாவட்ட காவல் துறை சார்பில் அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பேஸ்புக் சேகர் ஆகியோர் ஏற்றுக் கொண்டனர்.

இதையும் படிக்கசுதந்திர தினம்: ஈரோட்டில் தேசியக் கொடியை ஏற்றினார் ஆட்சியர்

இதன்பிறகு, சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கும் காவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழை வழங்கப்பட்டது. அதேபோல் வருவாய் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. 

மேலும், காரோன காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதையடுத்து விவசாயிகள் உள்ளிட்ட பயனாளிகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார். 

இவ்விழாவில் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.