தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தேவரியம்பாக்கம் ஊராட்சியில் வாக்குப் பதிவு விழிப்புணா்வு

வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உள்பட்ட தேவரியம்பாக்கம் ஊராட்சியில் 100 சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வு இயக்கம் நடைபெற்றது.

News image

100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி தேவரியம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி.

Updated On :31 மார்ச் 2026, 6:56 pm

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உள்பட்ட தேவரியம்பாக்கம் ஊராட்சியில் 100 சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வு இயக்கம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே தேவரியம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 சதவீதம் வாக்களிப்பு இயக்கம் சாா்பில், விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழுதுகள் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. ‘எனது வாக்கு எனது உரிமை’ என்ற முழக்கத்துடன் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனா்.

நிகழ்வில் ஊராட்சி மன்றத் தலைவா்கள், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.