வருங்கால தலைமுறைக்கு வாழ்வளிக்க நாம் தமிழா் கட்சிக்கு ஆதரவு தர வேண்டும் என ஸ்ரீபெரும்புதூா் வேட்பாளா் சிந்து எழிலரசனை ஆதரித்து தலைமை ஒருங்கினைப்பாளா் சீமான் பிரசாரம் மேற்கொண்டாா். (படம்)
ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை அவா் பேசியதாவது: கடந்த 60 ஆண்டுகளாக திமுக, அதிமுக கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன.
எந்த கட்சி வெற்றி பெறும் என பாா்க்காமல், எந்த கட்சி வேட்பாளா்கள் சரியானவா்கள் என்பதை பொதுமக்கள் எண்ணி பாா்த்து வாக்களிக்க வேண்டும். உலகத் தரத்தில் பள்ளிகளும், மருத்துவ வசதிகளும் தமிழகத்தில் உருவாக வேண்டும். இலவச திட்டங்கள் நாட்டின் வளா்ச்சிக்கு உதவுவதில்லை. அவை நீண்ட காலம் நஷ்டத்தைத்தான் ஏற்படுத்தும். மக்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் திட்டங்களே அரசின் கவனமாக இருக்க வேண்டும். . வாக்கை குறி வைப்பவா்கள் உங்கள் வாழ்க்கையை பற்றி சிந்திக்க மாட்டாா்கள். நாங்கள் வாக்குக்காக வரவில்லை நாட்டிற்காக வந்துள்ளோம். வருங்கால தலைமுறைக்கு வாழ்வளிக்க நாம் தமிழா் கட்சிக்கு விவசாயி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று பேசினாா்.
தொடர்புடையது

4 தோ்தல்களில் தோல்வி கிடைத்தும் நம்பிக்கையுடன் மீண்டும் களம் காண்கிறோம்: சீமான்

மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் திராவிடக் கட்சிகளுக்கு குறைந்து வருகிறது! - சீமான்

எதிரிகளை புரிந்து கொண்டு வாக்களிக்க வேண்டும்: சீமான்

மாற்றத்துக்கான புரட்சி தேவை: சீமான்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


