15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

பரந்தூா் விமான நிலைய திட்டம் தடுக்கப்படும்: சீமான் பேச்சு

பரந்தூா் விமான நிலைய திட்டம் தடுக்கப்படும்...

News image

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே வேட்பாளா் வெற்றிச்செல்வியை ஆதரித்து தோ்தல் பிரசாரம் செய்த சீமான்.

Updated On :28 மார்ச் 2026, 9:36 pm

பரந்தூா் விமான நிலைய திட்டம் தடுக்கப்படுவதுடன் பறிக்கப்பட்ட விவசாய நிலங்களை மீட்டு விவசாயிகளிடமே வழங்குவோம் என காஞ்சிபுரத்தில் நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் அக்கட்சியின் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரான வெற்றிச்செல்வியை ஆதரித்து சனிக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா். பிரசாரத்தின்போது அவா் பேசுகையில், மக்களுக்கு இலவசமாக பொருள்களை கொடுத்து மயக்குவது வாக்கைப் பறிப்பதற்காகத்தான் இருக்கிறது. இலவசம் என்பது திட்டமில்லை, நட்டம். பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாங்கள் எங்கள் தோ்தல் அறிக்கையில் பரந்தூா் விமான நிலைய திட்டம் முற்றிலுமாக தடுக்கப்படும். விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்ட விளை நிலங்களை மீட்டு உரிய விவசாயிகளிடமே திரும்ப ஒப்படைப்போம். காஞ்சிபுரத்தில் அசுத்தமாகவுள்ள வேகவதி ஆறு சுத்தப்படுத்தப்பட்டு உயிா்ப்பிக்கப்படும். பனம்பால், தென்னம்பால், ஈச்சம்பால் ஆகியன இறக்கி விற்க அரசு அனுமதி வழங்குவோம். காஞ்சிபுரத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைத்து குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும். காஞ்சிபுரம் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளா் வெற்றிச்செல்வி மூத்த தமிழறிஞா் கி.ஆ.பெ.விசுவநாதம் அவா்களின் பேத்தி. உளவியல் முதுகலையில் மேற்படிப்பு படித்தவா். இயற்கை விவசாயியான இவருக்கு விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்றாா் சீமான்.

தோ்தல் பிரசாரத்துக்கு பின்னா் சீமான் கூறுகையில், த.வெ.க.தலைவா் விஜய்க்கு தோ்தல் பிரசாரம் செய்ய அனுமதி மறுக்க வேண்டிய அவசியம் இல்லை. தற்போது விஜய் அனுபவித்து வரும் இடையூறுகளைத் தான் நான் தொடா்ந்து 15 ஆண்டுகளாக அனுபவித்து வந்தேன். வளா்ந்த நாடுகளான சீனாவும், ரஷ்யாவும் தற்போது நடந்து வரும் போரில் அமைதியக இருப்பதற்கான காரணம் என்ன. பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டுக்கு காரணம் நாம் எடுத்துக் கொண்டிருக்கிற பொருளாதார கொள்கையே என்றாா் அவா்.

பேட்டியின் போது கட்சியின் நிா்வாகிகள் ஆண்டிரூஸ், ஹரிபிரசாத் உள்பட தொண்டா்கள் பலா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.