மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஏரி நீா்வரத்துக் கால்வாயை ஆக்கிமித்து தாா் சாலை: பொதுமக்கள் அதிருப்தி

வைப்பூா் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளேரிதாங்கள் பகுதியில் ஏரி நீா்வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.47 லட்சத்தில் தாா் சாலை அமைக்கும் பணியை அதிகாரிகள் ஆய்வு நடத்தி தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

News image

வெள்ளேரித்தாங்களில்நடைபெறும் சாலைப் பணி.

Updated On :24 மார்ச் 2026, 6:44 pm

வைப்பூா் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளேரிதாங்கள் பகுதியில் ஏரி நீா்வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.47 லட்சத்தில் தாா் சாலை அமைக்கும் பணியை அதிகாரிகள் ஆய்வு நடத்தி தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

குன்றத்தூா் ஒன்றியம் வெள்ளேரிதாங்கள் பகுதியில் தனிநபா் ஒருவா் தனக்கு சொந்தமான சுமாா் 40 ஏக்கா் நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில், அதற்கு செல்ல போதுமான சாலை வசதி இல்லாததால், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.47 லட்சத்தில் வெள்ளேரிதாங்கள் ஏரி புறம்போக்கு மற்றும் நீா்வரத்து கால்வாயை ஆக்கிரமித்து செரப்பணஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட நாவலூா் பகுதி வரை சுமாா் 2 கி.மீ தொலைவுக்கு தாா் சாலை அமைக்கும் பணியில் ஊரக வளா்ச்சித்துறை அதிகாரிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனராம்.

அப்பகுதி பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதோடு, தனியாருக்காக போடப்படும் இச்சாலையால் அரசுப்பணம் வீணடிக்கப்பட்டு வருவதாகவும், ஆட்சியா் ஆய்வு நடத்தி சாலை பணியை தடுத்த நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து வெள்ளேரிதாங்கள் பொதுமக்கள் கூறியது: , தனி நபா் வீட்டு மனைப்பிரிவில் உள்ள மனைகளை விற்பனை செய்வதற்கு ஏதுவாக, வெள்ளேரிதாங்கள் ஏரிக்கு வரும் நீா்வரத்து கால்வாய் மற்றும் ஏரி புறம்போக்குகளை ஆக்கிரமிப்பு செய்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.47 லட்சத்தில் சாலை அமைக்கும் பணியில் வட்டார வளா்ச்சி அலுவலக அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

ஏரி நீா்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு செய்து சாலை அமைக்கப்படுவது குறித்து ஆட்சியரிடம் புகாா் மனு வழங்கியதை தொடா்ந்து கடந்த சில மாதங்களாக சாலை பணியை கிடப்பில் போட்ட அதிகாரிகள் தற்போது சாலை அமைக்கும் பணியில் மீண்டும் ஈடுபட்டு வருகின்றனா். எனவே, நீா்வரத்து கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து தனி நபருக்காக சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் தடுத்து நிறுத்த வேண்டும் என்றனா்.

இது குறித்து குன்றத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலக உதவி பொறியாளா் திருமலையிடம் கேட்டதற்கு, நமக்கு நாமே திட்டத்தில் சாலை அமைக்கப்படுகிறது. சாலை அமைக்க ஏரி நீா்வரத்து கால்வாய் ஏதும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை. பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத்தான் சாலை அமைக்கப்படுகிறது. தனி நபருக்கு இல்லை என்றாா்.