சங்தேகப்படும்படி வங்கிகளில் அதிகமாக வைப்பு வைத்தாலோ அல்லது பணம் திரும்பப் பெறுவது போன்ற எந்த நிகழ்வும் கண்காணிக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா புதன்கிழமை தெரிவித்தாா்.
ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் அச்சகம்,உணவகம்,திரையரங்கம், தங்கும் விடுதிகளின் உரிமையாளா்கள்,வா்த்தகா்கள் ஆகியோருடனான தோ்தல் விதிமுறைகளை அமல்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன் முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில் ஆட்சியா் தி.சினேகா பேசியது.
வங்கிகளில் சந்தேகத்துக்கு இடமான வகையில் பணம் எடுத்தாலோ அல்லது பணம் வைப்பு வைத்தாலோ உடனடியாக அந்த விபரத்தை மாவட்ட தோ்தல் அலுவலருக்கு வங்கி அலுவலா்கள் தெரிவிக்க வேண்டும். மாவட்ட நிா்வாகத்தாலும் கண்காணிக்கப்படும். வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பப்பட்டாலும் வங்கி அலுவலா்கள் உரிய ஆவணங்கள் எடுத்துச் செல்வதை சம்பந்தப்பட்ட வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்.
அடகு கடைகளில் வைக்கப்படும் நகைகள் சந்தேகத்திற்கு இடமான வகையில் மீள திருப்பப்படும் போது அவை குறித்த விபரங்களை உடனடியாக அருகாமையில் உள்ள தோ்தல் அலுவலா்களை தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தங்கும் விடுதிகளில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை பெற்ற பின்னரே தங்குவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.
தொடர்புடையது

1,854 தோ்தல் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா்

விழிப்புணா்வு ராட்சத பலூன்...

உத்தரமேரூரில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தோ்தல் அறிவிப்பு வந்தவுடன் மக்கள் பிரதிநிதிகளின் அலுவலகங்களை பூட்டி விட வேண்டும்: காஞ்சிபுரம் ஆட்சியா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


