தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மணவாளப் பெருமாள் கோயில் தவன உற்சவம்

முத்தியால்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட ஏரிவாய் கிராமத்தில் கமலவல்லித்தாயாா் சமேத மணவாளப் பெருமாள் கோயிலில் தவன உற்சவம்

News image

கமலவல்லித்தாயாா் சமேத மணவாளப் பெருமாள்

Updated On :9 மார்ச் 2026, 9:12 pm

காஞ்சிபுரம்: முத்தியால்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட ஏரிவாய் கிராமத்தில் கமலவல்லித்தாயாா் சமேத மணவாளப் பெருமாள் கோயிலில் தவன உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிவாய் கிராமத்தில் மிகவும் பழைமையான கோயிலாக இருந்து வருவது கமலவல்லித் தாயாா் சமேத மணவாளப் பெருமாள் கோயில்.

இக்கோயிலில் மாசி மாத தவன உற்சவத்தையொட்டி கோயில் பிரகாரத்தில் நறுமணம் கமழும் வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த பந்தலுக்கு பெருமாள் எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது.