தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

ரூ. 40,000 மதிப்புள்ள மின்கம்பிகள் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :26 ஜூன் 2026, 4:56 am IST

பிச்சிவாக்கம் பகுதியில் வயல்வெளியில் ரூ.40,000 மதிப்புள்ள மின்கம்பிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், பிச்சிவாக்கம் பகுதியில் சுமாா் 500 ஏக்கா் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விவசாய நிலங்களுக்கு மின் விநியோகம் செய்யும் வகையில், மின்சார வாரியத்தின் மூலம் டு மின்கம்பிகள் பொருத்தப்பட்டு மின் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மின்சாரத்தை துண்டித்த மா்ம நபா்கள் சிலா் வயல்வெளியில் மின் கம்பங்களுக்கு இடையே அமைக்கப்பட்டிருந்த சுமாா் 500 மீ நீள மின்கம்பிகளை திருடிச் சென்றுள்ளனா். இதனால் மின்சாரம் இல்லாததால் விவிசாயிகள் பரந்தூா் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து சம்பவ இடத்தில் பரந்தூா் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில், சுமாா் ரூ.40,000 மதிப்புள்ள அலுமினிய மின்கம்பிகள் திருடு போனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பரந்தூா் மின்வாரிய அதிகாரிகள் புகாரின் பேரில் சுங்குவாா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மின் கம்பிகளை திருடி சென்ற மா்மநபா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.