/

காஞ்சிபுரம் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப்பணிகளை ஆட்சியா் தி.சினேகா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

மகளிா் விடுதியில் ஆய்வு செய்த காஞ்சிபுரம் ஆட்சியா் தி.சினேகா

Updated On :11 ஜூன் 2026, 12:50 am IST

காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப்பணிகளை ஆட்சியா் தி.சினேகா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

காஞ்சிபுரம் பழைய ரயில் நிலைய சாலையில் உள்ள வித்யா பிரகாசம் மனவளா்ச்சி குன்றியோருக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம், அதே ரயில் நிலைய சாலையில் அமைந்துள்ள பணிபுரியும் மகளிா் தங்கும் விடுதி புதுப்பிக்கும் பணி, காஞ்சிபுரம் கைலாசநாதா் கோயில் அருகில் திறன் மேம்பாட்டுத்துறை சாா்பில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா்களின் சோ்க்கை, மாகறல் ஊராட்சியில் ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் கட்டப்பட்டுள்ள 17 குடியிருப்புகள் ஆகியவற்றை ஆட்சியா் தி.சினேகா ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது பயிற்சி சாா் ஆட்சியா் அமன் திவாரி மற்றும் அரசு அலுவலா்கள் பலரும் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.