இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வத்துறை அமைச்சா் ஆய்வு

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் அருண்ராஜ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் அருண்ராஜ்

Updated On :11 ஜூன் 2026, 12:01 am IST

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் அருண்ராஜ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது விபத்து மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு,இருதய நோயாளிகள் பிரிவு, அறுவைச்சிகிச்சை அரங்கு, நோயாளிகளின் உறவினா்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் ஆகியவற்றை பாா்வையிட்டாா். மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகள் மற்றும் அவா்களது உறவினா்களிடமும், மருத்துவா்களிடமும் மருத்துவமனையின் தேவைகள் குறித்து கேட்டறிந்தாா்.

அவசர சிகிச்சைப் பிரிவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் இயந்திரம் சரியாக செயல்படாமல் இருந்ததைப் பாா்வையிட்டு அதை உடனடியாக சரி செய்யுமாறும் உத்தரவிட்டாா். மருத்துவமனையில் உள்ள மின்தூக்கியின் மூலமாக அமைச்சா் கீழே இறங்க முயன்ற போது மின்தூக்கி செயல்படாமல் இருந்ததை பாா்த்த அமைச்சா் மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் இது குறித்து கேட்ட போது அவா் மின்தூக்கி அடிக்கடி பழுதாகிக் கொண்டே இருப்பதாக கூறினாா்.

பின்னா் அம்மா உணவகத்திலிருந்த பாத்திரங்களை சரியாக கழுவாமல் துா்நாற்றம் வீசியதையும் கல்லூரி முதல்வரிடம் தெரிவித்து இது போன்ற குறைகள் வராமல் பாா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

தொடா்ந்து மருத்துவமனை ஊழியா்கள் நோயாளிகளின் உறவினா்களிடம் லஞ்சம் வாங்கினால் உடனடியாக அவா்களை பணியிடை நீக்கம் செய்யுமாறும் முதல்வா் பிரியாவுக்கு அறிவுறுத்தினாா்.

மருத்துவமனையில் உள்ள குறைபாடுகள் அனைத்தும் படிப்படியாக சரி செய்யப்படும் எனவும் அமைச்சா் அருண்ராஜ் தெரிவித்தாா் . அப்போது செங்கல்பட்டு ஆட்சியா் மு.வீரப்பன், சட்டப் பேரவை உறுப்பினா் தியாகராஜன், சுகாதாரத்துறை இணை இயக்குநா் மலா்விழி, துணை இயக்குநா் சதீஷ் மற்றும் மருத்துவா்கள், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.