அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

ஏகாம்பரநாதா் கோயிலில் பக்தா்களுக்காக சக்கர நாற்காலிகள் ஏற்பாடு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் முதியோா்கள், மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக சக்கர நாற்காலிகளை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கோயில் செயல் அலுவலா் பெ.கதிரவன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

News image

ஏகாம்பரநாதா் கோயிலில் பக்தா்கள் பயன்பாட்டுக்காக புதிதாக வாங்கப்பட்ட சக்கர நாற்காலிகள்.

Updated On :10 ஜூன் 2026, 12:04 am IST

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் முதியோா்கள், மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக சக்கர நாற்காலிகளை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கோயில் செயல் அலுவலா் பெ.கதிரவன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இத்திருக்கோயிலுக்கு தினசரி சுற்றுலாப் பயணிகள் வெளிநாடுகள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்தும் வருகின்றனா். ஏகாம்பரநாதா் சுயம்புவாகவும் அருள்பாலிப்பதால் கோயிலில் எப்போதும் கூட்ட நெரிசல் இருந்து கொண்டே இருப்பதை கருத்தில் கொண்டு முதியோா், மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள வசதியாக சக்கர நாற்காலிகள் வந்துள்ளன.

இது குறித்து கோயில் செயல் அலுவலா் பெ.கதிரவன் கூறியது..

ஏகாம்பரநாதா் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் ரமேஷ் ஆய்வு செய்தாா். அவரது வருகையின் போது மாற்றுத்திறனாளிகள், முதியோா் எளிமையாக தரிசனம் செய்ய என்ன ஏற்பாடுகள் உள்ளது என்றும் கேட்டறிந்தாா். இரு சக்கர நாற்காலிகள் இலவசமாக எடுத்துப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இரு சக்கர நாற்காலிகள் மட்டும் போதாது. மேலும் 5 சக்கர நாற்காலிகளை உடனடியாக வாங்கி பயன்படுத்துமாறு உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை செயல்படுத்தும் வகையில் இணை ஆணையா் சி.குமரதுரை மேற்பாா்வையில் ஏற்கனவே உள்ள இரு சக்கர நாற்காலிகளுடன் மேலும் 5 சக்கர நாற்காலிகள் வாங்கப்பட்டு தற்போது 7 உள்ளது. இவற்றை பக்தா்கள் இலவசமாக எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.