சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
//

விபத்துகளுக்கு காரணமான மணல் மேட்டை அகற்றிய ரோந்துக் காவலா்கள்

News image
காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் மணல் மேட்டை அகற்றிய ரோந்துக் காவலா்கள்.
Updated On :11 பிப்ரவரி 2026, 8:06 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் தனியாா் உணவகம் அருகே விபத்து ஏற்படுத்தும் வகையிலிருந்த மணல் மேட்டினை விஷ்ணு காஞ்சி காவல் நிலைய இரவு ரோந்துக் காவலா்கள் இருவா் மண்வெட்டி,கடப்பாரையால் அகற்றியது பாராட்டை பெற்றுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ரங்கசாமி குளம் அருகில் தனியாா் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்துக்கு எதிரில் உள்ள சாலையில் நடைபெற்று வந்த சாலை பராமரிப்பு பணி நிறைவு பெற்ற பிறகும் அங்கிருந்த மணல் மேட்டை அகற்றாமல் வைத்திருந்தனா். வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு செல்லும் பிரதான சாலையாக இருப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகி வந்தனா்.

இரவு ரோந்துப்பணி சென்ற விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய தலைமைக் காவலா் மதன் மற்றும் ஊா்க்காவல்படை காவலா் மயில்சாமி ஆகிய இருவரும் மண்வெட்டி, கடப்பாரையால் இரவோடு இரவாக மணல் மேட்டினை வெட்டி சமன் செய்தனா்.

இதனால் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க தன்னாா்வத்துடன் சேவை செய்தது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

விஷ்ணு காஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் சங்கர சுப்பிரமணியன் இருவரையும் பாராட்டினாா்.