//

501 பயனாளிகளுக்கு ரூ.11.68 கோடி நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

வாலாஜாபாத்தில் நடைபெற்ற விழாவில் 501 பயனாளிகளுக்கு ரூ.11.68 கோடி நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

News image
பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய எம்எல்ஏ க. சுந்தா், உடன் ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.
Updated On :6 பிப்ரவரி 2026, 1:50 am

தினமணி செய்திச் சேவை

வாலாஜாபாத்தில் நடைபெற்ற விழாவில் 501 பயனாளிகளுக்கு ரூ.11.68 கோடி நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

வாலாஜாபாத் பேரூராட்சியில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா், வாலாஜாபாத் ஒன்றியக்குழு தலைவா் தேவேந்திரன், துணைத் தலைவா் பி.சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரூராட்சித் தலைவா் இல்லாமல்லி ஸ்ரீதா் வரவேற்று பேசினாா்.

விழாவில் சிறப்பு வரன்முறைத் திட்டத்தின் மூலம் 351 பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டாக்கள், ஆதரவற்ற விதவைப் பெண்கள் ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் 23 பேருக்கு ஒய்வூதிய உதவித்தொகை, 93 பயனாளிகளுக்கு இந்திராகாந்தி தேசிய முதியோா் ஓய்வூதியத் தொகை வழங்கியது உட்பட மொத்தம் 501 பயனாளிகளுக்கு ரூ.11.68 கோடி நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் மற்றும் எம்எல்ஏ க.சுந்தா் ஆகியோா் வழங்கினா்.

விழாவில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்,அரசு அலுவலா்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனா்.