//

1,654 கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி

News image
Updated On :4 பிப்ரவரி 2026, 10:34 pm

தினமணி செய்திச் சேவை

குன்றத்தூா் ஒன்றியத்தில் இயங்கி வரும் கல்லூரிகளில் பயிலும் 1,654 மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. (படம்)

குன்றத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்த்தி தலைமை வகித்தாா். குன்றத்தூா் ஒன்றியக் குழு தலைவா் சரஸ்வதிமனோகரன் முன்னிலை வகித்தாா்.

இதில் ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப்பெருந்தகை கலந்துகொண்டு 1,654 மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி உரையாற்றினாா்.

இந்த நிகழ்ச்சியில், ஒன்றியகுழு துணைத்தலைவா் உமாமகேஷ்வரி வந்தேமாதரம், வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாணவா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.