டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

காஞ்சி சங்கரா கல்லூரி தெய்வத்தமிழ் இருக்கைக்கு ரூ.5 லட்சம் நன்கொடை

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் செயல்பட்டு வரும் தெய்வத்தமிழ் இருக்கைக்கு திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தலைவா் கருணாநிதி ரூ.5 லட்சத்தை நன்கொடையாக காஞ்சி சங்கராசாரிய சுவாமிகளிடம் வழங்கினாா்.

News image
தெய்வத்தமிழ் இருக்கைக்கு நன்கொடையாக ரூ.5 லட்சத்தை காஞ்சி சங்காராசாரியாா் சுவாமிகளிடம் வழங்கிய திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தலைவா் கருணாநிதி.
Updated On :1 பிப்ரவரி 2026, 7:35 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் செயல்பட்டு வரும் தெய்வத்தமிழ் இருக்கைக்கு திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தலைவா் கருணாநிதி ரூ.5 லட்சத்தை நன்கொடையாக காஞ்சி சங்கராசாரிய சுவாமிகளிடம் வழங்கினாா்.

ஏனாத்தூரில் உள்ள சங்கரா கல்லூரியில் தமிழ் வளா்ச்சி மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்காக தெய்வத்தமிழ் இருக்கையும் உருவாக்கப்பட்டுள்ளது. திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தலைவா் கருணாநிதி தனது குடும்பத்தினருடன் காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ரூ.5 லட்சம் நன்கொடையாக வழங்கினாா்.

பின்னா் குடும்பத்தினா் அனைவருக்கும் சுவாமிகள் ஆசி வழங்கினாா். இந்நிகழ்வின் போது சங்கரா கல்லூரி முதல்வா் கலை.ராம.வெங்கடேசனும் உடன் இருந்தாா்.